Sunday, May 15, 2011

அமைதி புரட்சி

எனது பதிவெட்டில் 9 மார்ச் அன்றே எழுதி இருந்தேன் அமைதி புரட்சியை பற்றி அது தமிழ் நாட்டில் நடந்தே விட்டது
நம் மொழி மொழி என்று கூறி நம் இனத்தவர்கள் மலை மலையக மடிந்தபோது தன 10 தலைமுறைக்கும் சொத்து சேர்ப்பதில் மட்டுமே கவனமாய் இருந்தவர்களுக்கு?..............


ஆத்திகவாதியின் பார்வையில்- தெய்வம் நின்று கொன்றுவிட்டது

நாத்திகவாதியின் பார்வையில்- அநீதிக்கு தண்டனை
கிடைத்துவிட்டது


தண்டனை என்ற வார்த்தை ஏன் ஏன்?
ஒரு கட்சி தேர்தலில் தோற்பது சாதாரணம் தான் தோல்வியும் வெற்றியும் மாறி மாறி வருபவை அனால் இந்த முறை தோல்வி? இது கலைஞரின் கடைசி தேர்தலாக இருக்க நிறைய வாய்ப்புகள் இருக்கிறது? அந்த தருணத்தில் தான் மிகவும் விரும்பி எங்கும் பதவி தான் கையில் இல்லாமல் இருப்பது கண்டிப்பாக தண்டனையே வேதனையின் உச்சமே
இனி தன்னை ராஜா போல நினைத்துகொண்டு வாரம் ஒரு பிரிவினரை முக்கியமாக சினிமா துறையினரை அழைத்து  இவர் புகழ்  பாட வைத்து இன்புரமுடியாது இதுவே பெரும் சோதனை தான் அவருக்கு :-D


ஒரு செம்மொழி மாநாடு என்று தமிழை வளர்க்க முற்பட்டதன் பதில் ஓராயிரம் தமிழ் மைந்தர்களை காப்பற்றி தமிழை வளர்த்திஇருக்கலாம் ?
நான் கூறுவதில் என்ன தவறு?
அரசியல் சாணக்கியர் என்று வருநிக்கபடவர் கடைசியில் நம்பியது வடிவேலுவை? இதுதான் காமெடியின் உச்சமே
இதற்க்கு மேல் பெரிய தந்திரம் எதுவாக இருக்கமுடியும்


இந்த முறை திமுக வேல்வதிர்கான காரணத்தை கூறுவதை விட தொற்பதிர்கான காரணம் அதிகம்
1 . நகரங்களில் 2 g
2 . கிராமபுரங்களில் மின் தடை
3 . தொழில் செய்பவர்கள்- சினிமா துறை, நில ஆக்கிரமிப்புகள், மணல் கொள்ளை,
இவை
எல்லாவற்றிலும்   ஒன்று விடாமல் இருக்கும் இவர்கள் குடும்ப ஆதிக்கம்


இவை எல்லாவற்றையும் உள்ளுக்குள் வைத்து வோட்டளித்து அவர்கள் வரும்பொழுது எல்லாம் கூட்டம்  கூடி உங்களுக்கு தான் வோட்டை போட்டோம் என்று கூறி  எப்படி எல்லாம் நேக்காக காயை  நகர்தியிருகிரார்கள் தமிழக மக்கள்  இது வல்லவோ ஜனநாயக புரட்சி..... இது இந்த கட்சிக்கு மட்டுமில்லை இனி வருபவர் எவராக இருந்தாலும் இனி மக்களை ஏமாற்ற முடியாது..... பெரிய எச்சரிக்கை
அழகாக

Saturday, March 12, 2011

கேள்வி- II



பால் அபிஷேகம் புண்ணியம் என்றால்?
அது தன ரத்தத்தை  பாலாக கொடுத்த  பசுவிற்கா ? அல்லது 
பணம்  கொடுத்து அவற்றை வீணாக்கும்  இந்த மனிதர்களுக்கா?






இந்தியாவின் உணவு பற்றாக்குறை 10 .33% ஆக  உயர்வு?
இந்தியாவின் ரூபாய் நோட்டை கிழித்து வீணாக்குவது  குற்றம்  என்றால்?
பசியால் வாடுவோர் கோடி இருக்க  இப்படி உணவு  பண்டங்களை
வீனாக்குவோரும்  குற்றவாளிகள் தானே? 

Thursday, March 10, 2011

நல்ல கேள்வி?

Wednesday, March 9, 2011

மர்மம் என்ன? கூட்டணி நாடகங்கள்


இந்த முறை காங்கிரஸ் திமுகவுடனுடைய மர்ம பேரங்கள் கூட்டணி பணியல்கள் பல சந்தேகங்களை ஏற்படுத்துகிறது


1 . இவர் 60 ௦ சீட்டுகள் மட்டுமே தருவன் என்பதும் இல்லை 63 சீட்டுகள் வேண்டும் என்று அவர்கள் கேட்பதும் ....வெறும் 3 சீட்டுகளுக்க இவர்கள் அடித்துகொள்கிறார்கள்?


2 . திடுமென்று சோனியா காங்கிரசின் தன்மானத்தை பற்றி பேசுகிறார்.... நல்ல நகைச்சுவை இதே கலைஞர் தான் அன்று இந்திரா காந்தியை ரத்த காட்டேரி என்றும் , ....இன்னும் எத்தனை எத்தனையோ கூறி இருக்கிறார்.... இதை எல்லாம் மீறி அமைந்த கூட்டணிக்கு திடுமென்று எங்கே இருந்து தன்மானம் வந்தது ?


3 . 2g ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சில முக்கிய புள்ளிகள் விசாரிக்கபடலாம் என்று அஞ்சப்படும்போது திடுமென்று பேசப்படும் பேரங்கள் , அடங்காதவர்கள் அடங்கி பொய் பணிவது இவை எல்லாம் அந்த விவகாரத்தில் வரும் உண்மையை எவ்வளவு தூரம் தடுக்கும் என்பது கவலை மிகுந்த விஷயம்?


4 .நம் தமிழ் சகோதரர்கள் கூட்டம் கூட்டமாக மடிந்தபோது எதனை முறை டெல்லி விரைந்தார்கள் இல்லை தலைவர்களை சந்தித்தார்கள் என்பது மனதை உருக்கும் கேள்வி? இபோழுது இத்தனை முறை அதுவும் தல்லாமல் இருந்தாலும் விடாமல் செல்கிறார்கள்! கண்கூடாக நடக்கும் வேதனை .......நம் மக்களை அழிக்க உதவியர்களின் ஆதரவை பெற இத்தனை பணிவு இத்தனை கெஞ்சல்கள்.... இதெல்லாம் மீறி ...... தங்களை பறை சாற்றி கொள்வது என்னவென்றால்?


தமிழ் மக்கள் நலனுக்காக தமிழ் மண்ணுக்காக உயிர் என்று ............... வடிவேலுவின் டோனில் சொலவேண்டுமேன்றால் இன்னுமா இந்த ஊரு நம்மள நம்புது? என்று கேட்பது போல் இருக்கிறது

5 . இதெல்லாம் விடுங்க தேர்தல் ஏப்ரல் 13 இருக்க வோட்டு எண்ணிக்கை ஏன் ஒரு மாதம் கழித்து நடத்தப்படவேண்டும்?


இதன் முடிவு:
சரி ஒவ்வொரு  முறையும் யார் வந்தாலும் மக்களுக்கு ஒன்றும் சிய போவதில்லை ஒன்று அவர்கள் குடும்பத்திற்கு அல்லது சினிமா துறை சேர்ந்தவர்களுக்கும் மட்டுமே உபயோகம் என்று ஓரிரூ முறை ஓட்டை செலுத்தாமளிருந்ததுண்டு
ஆனால் இம்முறை நம் இனத்தவர்கள் மடிந்ததற்கு அஞ்சலி செய்ய வேண்டும்
அவர்களுக்கு உதவ வழி இருந்தும் அவர்கள் அழிவதற்கு உதவியர்களுக்கு
எனது வோட்டு கள்ள வோட்டின் மூலம் போய்விடக்கூடாது என்பதற்காகவே
இம்முறை கண்டிப்பாக வோட்டை போடவேண்டும் என்று முடிவேடுத்திருகிரேன்







Thursday, October 7, 2010

எந்திரன் - தமிழ் சினிமாவின் அடுத்த கட்டம்

சரி படம் வந்து ஒரு வாரம் ஆகிவிட்டது பார்க்கலாம் கூட்டம் கம்மி ஆகி இருக்ககூடும் என்று பெங்களூரில் தியேட்டருக்கு சென்றேன்..... ஏமாற்றம் ....கூட்டம் அலைமோதியது....சரி ஹிந்தியிலாவது பார்க்கலாம் என்றால் அங்கும் கூட்டம் ..... எனக்கு மனதில் தோன்றிய ஒன்று




ரஜினியின் " இது நானா சேர்த்த கூட்டம் இல்லை அன்பால சேர்ந்த கூட்டம் " என்ற வசனம்  தான்  கண்டிப்பாக இன்னும் ரஜினி நூறு படங்கள் நடித்தாலும் இந்த கூட்டம் இருக்கும் ..... ரஜினிக்கு ஒரு வேண்டுகோள்- சிரஞ்சீவியை போல் அரசியலில் குதித்து பாழாகாமல் சினிமாவில் இந்த சிம்மாசனத்திளியே இருங்கள்.... இந்த இடம் யாருக்கு கிடைகாத ஒரு தனி இடம்......இனி யாரும் அடைவது மிக மிக கடினம் ...


சரி ஒருவழியாக 200 டிக்கெட் எடுத்து உட்கார்ந்தேன் முதலில் கொஞ்சம் நெருடல் இருந்தது இருநூறு ருபாய் என்று


படம் பார்த்த பிறகு மனதில் -: அந்த இருநூறு ருபாய் மறந்தே போனது " movie is worth "


விமர்சனம்:


இரு விமர்சனம் ரஜினி ரசிகராக, நல்ல படங்களை விரும்பும் ரசிகனாக


1 . நல்ல படங்களை விரும்பும் ரசிகராக--
அணையப்போகும் விளக்கு பிரகாசமாக எறியும் என்பார்கள் அவ்வகையில் இப்படம் கதை எழுதிய சுஜாதாவிருக்கு சமர்ப்பணம் அருமையான கற்பனை......


கதை-
வசீகரன்   தனது 10 வருட உழைப்பில் ஒரு ரோபோவை உருவாக்குகிறான்.... அதை இந்திய ராணுவத்தில் சேர்த்து பயன் கொள்ள செய்வதே லட்சியமாக...... அதை உணர்ச்சி இல்லாத இயந்திரம் என்று அவரது மூத்த அதிகாரிகள் தள்ளுபடி செய்கின்றனர்.... அதற்காக உணர்சிகளை தரும் செயற்கை புத்தியை(Artifical intelligence ) செலுத்துகிறார். ரோபோ உணர்வை பெற்று வசீகரனின் காதலியை விரும்புகிறது ராணுவ டெஸ்டில் கோட்டை விடுகிறது ....


அட நாம காலேஜ் பசங்க மார்க்கில் கொட்டோ விடுகிறது போல .....

 
சரி கதைக்கு வருவோம் இலட்சியத்தை பாழடித்ததற்காக வசீகரன்  ரோபோவை வெட்டி குப்பையில் போடுகிறான்..... அந்த ரோபோவை , வில்லன் சரி செய்து அழிவை ஏற்படுத்தும் சிப் பை அதனுள் செலுத்துகிறான்....அது வில்லனை கொன்று விஸ்வருபம் எடுக்கிறது


வில்லன் ரோபோ வசீகரனின் காதலியை கடத்தி வசீகரனிர்க்கு  எதிராக போர் தொடுக்கிறது பல ரோபோக்களை உருவாக்குகிறது ........கடைசியில் வரும் கிராபிக்ஸ் பைட் தமிழ் சினிமாவை தலைதூக்கும் ஒரு புதுமை ஆகும் ....சபாஷ் சங்கர் அண்ட் குரூப்


கடைசியில் ரோபோவின் ராஜ்யத்தை அழித்து அதன் அழிக்கும் கமான்ட்களை சரி செய்கிறான் வசீகரன்..... பல சேதங்களை ஏற்படுத்திய இந்த ரோபோவை நீக்க சொல்கிறது கோர்ட் .... தனது பார்ட் ஒவ்வோன்றையும்  தானாகவே கழட்டி வைகிறது ரோபோ ....இப்படி முடிகிறது படம்




படத்தில் பிடித்தது----
1 . பாதிவரை வரும் சுஜாதாவின் வசனங்கள் ...முக்கியமாக அந்த .ட்ராபிக் கான்ஸ்டபிளிடம் உரையாடும் வாசனைகள், காலேஜில் பிட் அடிக்கும்பொழுது பேசும் வசனங்கள்,
2 கிராபிக்ஸ்- தலையை திருப்புவது, காரிலிருந்து முன்னிற்கு இழுத்து சண்டை போடுவது...... கடைசி கிளைமாக்ஸ்
3 கிளைமாக்ஸ் வசனம்- உண்மையில் ரோபோ ரஜினி தனது பாகத்தை கழட்டி வைக்கும்பொழுது நெருடத்தான் செய்கிறது அதுவும் அவர் பேசும் வசனங்கள் மிக உண்மை
" டேய் நீங்க ரெண்டு பெரும் உங்ககிட்ட இருக்கற ஒன்னு என்கிட்ட இல்லன்னு சொன்னீங்களே   அதனால எத்தன சிக்கல் பார்த்தீங்களா  ,,, நான் FEELINGSA  சொன்னேன் " என்று பேசும் வசங்கள் பலவற்றை குறிக்கும் நிதர்சன உண்மை
4 . பாடல்கள்-, எ.ர ரஹ்மான் இசை, ரீ ரெகார்டிங்
5 . குழந்தைகளை கவரும் கொசுவுடன் பேசும் வசனங்கள்


படத்தில் தோய்வு
1 ரோபோ பீலிங்க்ஸ் இல்லாதது என்று நிருபிக்க ஒரு தீவிபத்திலிருந்து ஒரு பெண்ணை உடை இல்லாமல் காப்பாற்றும் சீன்.... அதை பத்திரிகை காரர்கள் போடோ பிடிக்க அப்பெண் தற்கொலை செய்து கொள்வது
மொக்கை ஐடியா.... இது..... மொக்கை காரணம் வேறு ....
.விஞ்ஞான கூடத்தில் வசீகரனை கத்தியால் குத்த வரும் அந்த சீனுடன் விட்டிருக்கலாம் .....
2  கிராபிக்ஸ் அப்பட்டம தெரிகிறது பல இடங்களில் உதாரணம் அந்த தீ விபத்திலிருந்து காப்பாற்றும் சீன்.
ஆஸ்கார் பூக்குட்டி ஸ்பெஷல் எபக்ட்ஸ் இன்னும் கொஞ்சம் மேனகெட்டிருக்கலாம்
3 . வில்லன் ரஜினி என்பது பெரிய ஹைலைட்அதற்கு இன்னும் சிறப்பான வசனங்களை கொடுத்திருக்கலாம்.....நாம் எதிர்பார்த்தது "இது எப்படி இருக்கு" பரட்டை ரஜினி போன்ற ஒன்றை ................ சான்ஸ் மிஸ்


ரஜினி ரசிகனின் பார்வையில்:-
படம் ரொம்ப நல்லா இருக்கு ஆனா
எப்பொழுதும் ரஜினி படத்த பார்த்துட்டு ஏதாவது ஒரு பஞ்ச் வசனம் மனசுல நிக்கும்
அதிருது இல்ல, லக லக லக போன்ற வசனங்கள்.... அப்படி எல்லாம் இதுல எதுவும் இல்ல


தலைவர் நடக்குறத தவிர வேற எந்த ஸ்டைலும் பெரிசா காமிக்கல


பிடித்தது:-


1 அட இந்த காரெக்டருக்கு குறிப்பா வில்லன் கரெக்க்டருக்கு வேறு யாரும் பொருந்தி இருக்க முடியாது .........
2 எப்ப பாரு தலைவர் பட கதை ஒரு பணக்காரநிலிருந்து ஏழை ஏழையிளிருந்து பணக்காரன் இந்த ட்ரெண்டை உடைத்த விதம்
மூன்று  பரிமாணங்களிலும்  விளாசும் விதம் .. ..... அட எத்தன வயசானாலும் நீங்க சூப்பர் ஹீரோ தானுங்க....
4 கடைசியில் பேசும் கிளைமாக்ஸ் வசனங்கள் ரஜினி தவிர வேற யார் பேசி இருந்தாலும் உணர்வு இருந்திருக்க வாய்ப்பில்லை......
5 . அட தலைவரோட பழைய சிரிப்பு


சூப்பர் ஸ்டாரின் மைல் ஸ்டோன் படங்களில் இதுவும் ஒன்று கண்டிப்பாக

பைனல் கமெண்ட்-

1. தமிழ் சினிமாவின் புதிய பரிமாற்றம் .
கண்டிப்பாக குடுமபத்துடன் கண்டு ரசிக்கலாம்...

.
எந்திரன்  கூறும் உண்மை - லவ்வுன்னு வந்துட்டா  மனுஷன் என்ன ரோபோ என்ன எல்லாம் பாழாக  வேண்டியது தான் :-D. 

Saturday, July 31, 2010

மணிக்கு 350 கி.மீ., செல்லும் அதிவேக ரயில்-சீனா



உலகின் மிக வேகமாக செல்லும் ரயிலை சமீபத்தில் சீனா இயக்கி, சாதனை படைத்துள்ளது. இந்த ரயில் தற்போது ஓடிக்  கொண்டிருக்கும் புல்லட் ரயிலை விட வேகமானது. இதன் சராசரி வேகம் மணிக்கு  350 கி.மீ.,   இந்த ரயில் ஆயிரத்து 68 கி.மீ., தொலைவுள்ள மத்திய சீனாவில் வூஹானையும், தென்சீனாவில் குவாங் சோவையும் இணைக்கிறது. இதற்கு முன்பு இந்த இரண்டு நகரங்களை இணைக்கும் ரயிலில் பயணித்தால்  6 மணி நேரம் ஆகும்.  ஆனால், தற்போது இயக்கப்படும் அதிவேக ரயில் மூலம் இரண்டு மணி 45 நிமிட நேரத்தில் சென்று விடலாம்.


சீனாவில் விரைவு ரயில் போக்குவரத்து மத்திய சீனாவை இணைக்கும் வகையில் வளர்ச்சி குறைந்த பகுதிகள் மற்றும் அதிக தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகள் என 20 நகரங்களை கடந்து வருகிறது. சீமென், பாம்பார்டியர் மற்றும் ஆல்ஸ்டோம் ஆகிய நிறுவனங்கள் இந்த விரைவு ரயிலை வடிவமைக்கவும், அதன் பாகங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டன. கடந்த டிசம்பரில் இந்த ரயில் வடிவமைக்கப்பட்டு, 394 கி.மீ., வேகத்தில் இயக்கப்பட்டு,  சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்த ரயிலின் சராசரி வேகம் 350 கி.மீ., உலகில் உள்ள மற்ற எந்த ரயிலையும் விட இது மிக வேகமாக செல்லக்கூடியது.


ஜப்பானில் மணிக்கு 243 கி.மீட்டரும், ஜெர்மனியில் 232 கி.மீட்டரும், பிரான்சில் 277 கி.மீட்டர் வேகத்திலும் தான் ஓடுகின்றன. அதிவேகமாக செல்லும்  இந்த ரயிலுக்கு 380ஏ என்ற பெயர் வைக்கப் பட்டுள்ளது. சாங்சுன் ரயில்வே வாகன நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த ரயில் ஒரு மணி நேரத்தில் 380 கி.மீ.,  நேரத்தில் செல்லக் கூடியதென்றாலும் சிறிது வேகம் குறைக்கப்பட்டுள்ளது.  கடந்த மார்ச் மாதம் சீனாவின் ரயில்வே துறை அமைச்சருக்கும், சாங்சுன் ரயில்வே வாகன நிறுவனத் திற்கும் இடையே ஏற்பட்ட ஓப்பந்தப்படி அதிவேக ரயில்கள் 100 தயாரிக்கப்பட உள்ளன. புதிய இருப்புப் பாதைகள் அமைக்கப்பட்டப் பின் பீஜிங் மற்றும் ஷாங்காய் நகரங்களுக்கு இடையே அடுத்த ஆண்டு முதல் இந்த அதிவேக ரயில் ஓடத் துவங்கும். பீஜிங் - ஷாங்காய் இடையே உள்ள தூரம் ஆயிரத்து 302 கி.மீட்டர். இந்த தூரத்தை அதிவேக ரயில் 4 மணி நேரத்தில் கடந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது. 
.

அட இதெல்லாம் விடுங்க நம்ம ஊருல வேகமா ஓடுற டிரைன்  எது தெரியுமா ....  சதாப்தி ....ஸ்பீட்  72  km /hr..........   ..இதுக்கு மேல என்னத்த  சொல்றது

Saturday, May 1, 2010

விண்ணைத்தாண்டி வந்தவர்களும் டைவர்ஸ் அப்ளை செய்தவர்களும்

விண்ணை தாண்டி வருவாயா - இந்த படத்தை பார்த்து ஒரு மாதம் கூட ஆகவில்லை அதற்குள் என் பக்கத்து வீட்டில் நடந்த கொடுமை இது......
அவர்களை நேரில் திட்ட எனக்குரிமையில்லை ஆனால் இதை போன்றவர்களை பொருமித்தள்ள எனக்கு கிடைத்த பெரும் ஆறுதல் ! பதிப்புகள்தான்
சரி விஷயத்திற்கு போவோம்..................................

இந்து மதத்தை சேர்ந்த வரும் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பெண்ணும் காதலித்தனர்
வீட்டில் போராடினர்.... கடைசியில் இவர்களின் தற்கொலை மிரட்டல்கள் ஜெயித்தது..... திருமணம் நடந்த்து ....
திருமண பேச்சு ஆரம்பித்தது முதல் தொடங்கியது சம்பிரதாய சிக்கல்கள்....
கடைசியில் பெண் வீட்டில் ஒத்துகொண்டனர்... பையனின் வீட்டு சம்பிரதாயபடி திருமணம் செய்வதென்று ......
இதை அப்பெண் மனதளவில் பின்னடைவாகவே கருத தொடங்கினாள்

விளைவு திருமண வாழ்கையில் சிக்கல்கள் ஆரம்பிக்க தொடங்கியது யார் சம்பிரதாயங்களை கடைபிடிப்பது என்று ...சிக்கல்கள் தொடங்கவே இருவரும் இன்னொருவருடைய ஜாதி சம்பிரதாயங்களை நையாண்டி செய்ய தொடங்கி பிரச்சினைகளை பெரிசாக்க தொடங்கினர்........

இப்படி நடந்து கொண்டிருக்கும்பொழுது.நடந்த .... கொடுமையான நிகழ்வு அவர்களுக்கு பிறந்த குழந்தை .....
மறுபடியும் குழந்தையின் விசேஷங்கள் தொடர்பான சமய சம்பிரதாய பிரச்சினைகள் தொடங்கியது.................
வேறு வழி இல்லாமல் இருவரும் ஒன்று இரண்டு விஷயங்களை அவரவர்களுக்காக விட்டு கொடுக்க ஆரம்பித்தனர்... ஆனால் விட்டு கொடுத்துவிட்டு இருவரும் அடிபட்ட புலிபோல் காத்துகொண்டிருன்தனர் ....

கொடுமை காதலித்து வீட்டில் போராடி திருமணம் செய்துகொண்டது என்னவோ இவர்கள் ஆனால் ஒவ்வொரு முறையும் இவர்கள் பிரிய முற்படும்பொழுது இவர்களை குழந்தைகாகவவது சேர்ந்து வாழுங்கள் என்று அறிவுரை கூற இரு வீடுகளிலிருந்தும் ஆட்கள் வருவதும் போவதும் பெரும் கொடுமை ...............

பிரச்சினைகள் பூதாகரமாய் வெடிக்க தொடங்கியது
....
அப்பெண் வழக்கம்போல் தற்கொலை முயச்சியில் மிரட்ட....

முடிவுக்கு வந்தது.... இருவரும் பிரிவதென்று....கெமிஸ்ட்ரி சரி இல்லை என்று .....

....
இருவரும் தனி தனியே வீட்டை காலி செய்தனர்.... இந்த பிரச்சினைகளுக்கு காரணம் குழந்தை என்று இருவரும் குழந்தை எனக்கு வேண்டாம் உனக்கு வேண்டாம் என்று சண்டையை வளர்க்க ....
அக்குழந்தை பரிதாபத்துடன் தத்தா பாட்டியுடன் சென்றுகொண்டிருந்தது..... இதை கண்ட என் கண்கள் கலங்கியது ......

விண்ணை தாண்டி வந்த இருவரும் வேறு விண்ணை நோக்கி செல்ல தொடங்கினர் . ...
குழந்தையை தனியே விட்டு விட்டு.........

கலப்பு திருமணம் செய்து கொள்ளவேண்டியவர்கள் அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய ஒன்று]'
1 ஒவ்வொருவரும் இன்னொருவருடைய நம்பிக்கைகளை மதிக்கவேண்டும்.
2 . முக்கியமாக விட்டுகொடுப்பதை தோல்வியாக கருதக்கூடாது
3 .முக்கியமான ஒன்று குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுக்கும் முன் நன்கு யோசிக்கவேண்டும் கணவன் மனைவியிடையே கெமிஸ்ட்ரி இத்யாதிகளை அபோழுதே முடிவெடுக்கவேண்டும் பிரிவதென்றால் கணவன் மனைவி பிரியலாம் தாய் தந்தை பிரிய கூடாது.... அதன் பின் இன்னொரு திருமணம் நடந்தாலுமே அக்குழந்தை படும் துன்பம் ஏராளம்.....
4 . குழந்தை வந்த பின் கணவன் மனைவியின் அணியோன்யத்தில் சிறிது நெருடல்கள் ஏற்படும் அதை எதிர்கொள்ள பொறுமையை வளர்த்துகொள்ளவேண்டும்...
5 இப்பொழுதேல்லாம் அனேக வீடுகளில் இந்த தற்கொலை மிரட்டல்கள் அதிகமாக கேள்வி படுகிறேன்.....இந்த ஆயுதத்தை மிரட்ட பயன்படுத்துவது பெரிதும் பெண்களே........ இதை போன்ற வற்றை எப்பேற்பட்டாவது போராடி வெல்ல வேண்டும்..... இதை போன்ற வற்றை சாதாரணமாக வளர விடக்கூடாது.. விளைவுகள் விபரீதமானது இதனால் இருவருடைய வாழ்கையும் பாழாக பெரிய வாய்ப்புள்ளது.....இதற்க்கு கவுன்சிலிங் வழங்கும் நிறுவனங்கள் எவ்ளவோ உள்ளன..... ..
6 நாம் நம் தாய் தந்தை சகோதர சகோதரிகளிடம் சண்டை போடும்பொழுது கோர்ட் படி ஏறுவதில்லை அது போல தான் கணவன் மனைவி உறவும் சின்ன சண்டைகளுக்கு கூட கோர்ட் படி ஏற நினைப்பது அபத்தம்.....

இது என் மனதில் தோன்றிய ஆழ்ந்த கருத்து.... தங்களுடைய கருத்துகளும் இங்கே பகிர்ந்துகொள்ளுங்கள்.... நல்லதொரு சமுதாயம் உருவாக நாம் அனுபவித்த பார்த்த சம்பவங்களை பகிர்ந்துகொள்வது அவசியமே.....