Saturday, May 1, 2010

விண்ணைத்தாண்டி வந்தவர்களும் டைவர்ஸ் அப்ளை செய்தவர்களும்

விண்ணை தாண்டி வருவாயா - இந்த படத்தை பார்த்து ஒரு மாதம் கூட ஆகவில்லை அதற்குள் என் பக்கத்து வீட்டில் நடந்த கொடுமை இது......
அவர்களை நேரில் திட்ட எனக்குரிமையில்லை ஆனால் இதை போன்றவர்களை பொருமித்தள்ள எனக்கு கிடைத்த பெரும் ஆறுதல் ! பதிப்புகள்தான்
சரி விஷயத்திற்கு போவோம்..................................

இந்து மதத்தை சேர்ந்த வரும் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பெண்ணும் காதலித்தனர்
வீட்டில் போராடினர்.... கடைசியில் இவர்களின் தற்கொலை மிரட்டல்கள் ஜெயித்தது..... திருமணம் நடந்த்து ....
திருமண பேச்சு ஆரம்பித்தது முதல் தொடங்கியது சம்பிரதாய சிக்கல்கள்....
கடைசியில் பெண் வீட்டில் ஒத்துகொண்டனர்... பையனின் வீட்டு சம்பிரதாயபடி திருமணம் செய்வதென்று ......
இதை அப்பெண் மனதளவில் பின்னடைவாகவே கருத தொடங்கினாள்

விளைவு திருமண வாழ்கையில் சிக்கல்கள் ஆரம்பிக்க தொடங்கியது யார் சம்பிரதாயங்களை கடைபிடிப்பது என்று ...சிக்கல்கள் தொடங்கவே இருவரும் இன்னொருவருடைய ஜாதி சம்பிரதாயங்களை நையாண்டி செய்ய தொடங்கி பிரச்சினைகளை பெரிசாக்க தொடங்கினர்........

இப்படி நடந்து கொண்டிருக்கும்பொழுது.நடந்த .... கொடுமையான நிகழ்வு அவர்களுக்கு பிறந்த குழந்தை .....
மறுபடியும் குழந்தையின் விசேஷங்கள் தொடர்பான சமய சம்பிரதாய பிரச்சினைகள் தொடங்கியது.................
வேறு வழி இல்லாமல் இருவரும் ஒன்று இரண்டு விஷயங்களை அவரவர்களுக்காக விட்டு கொடுக்க ஆரம்பித்தனர்... ஆனால் விட்டு கொடுத்துவிட்டு இருவரும் அடிபட்ட புலிபோல் காத்துகொண்டிருன்தனர் ....

கொடுமை காதலித்து வீட்டில் போராடி திருமணம் செய்துகொண்டது என்னவோ இவர்கள் ஆனால் ஒவ்வொரு முறையும் இவர்கள் பிரிய முற்படும்பொழுது இவர்களை குழந்தைகாகவவது சேர்ந்து வாழுங்கள் என்று அறிவுரை கூற இரு வீடுகளிலிருந்தும் ஆட்கள் வருவதும் போவதும் பெரும் கொடுமை ...............

பிரச்சினைகள் பூதாகரமாய் வெடிக்க தொடங்கியது
....
அப்பெண் வழக்கம்போல் தற்கொலை முயச்சியில் மிரட்ட....

முடிவுக்கு வந்தது.... இருவரும் பிரிவதென்று....கெமிஸ்ட்ரி சரி இல்லை என்று .....

....
இருவரும் தனி தனியே வீட்டை காலி செய்தனர்.... இந்த பிரச்சினைகளுக்கு காரணம் குழந்தை என்று இருவரும் குழந்தை எனக்கு வேண்டாம் உனக்கு வேண்டாம் என்று சண்டையை வளர்க்க ....
அக்குழந்தை பரிதாபத்துடன் தத்தா பாட்டியுடன் சென்றுகொண்டிருந்தது..... இதை கண்ட என் கண்கள் கலங்கியது ......

விண்ணை தாண்டி வந்த இருவரும் வேறு விண்ணை நோக்கி செல்ல தொடங்கினர் . ...
குழந்தையை தனியே விட்டு விட்டு.........

கலப்பு திருமணம் செய்து கொள்ளவேண்டியவர்கள் அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய ஒன்று]'
1 ஒவ்வொருவரும் இன்னொருவருடைய நம்பிக்கைகளை மதிக்கவேண்டும்.
2 . முக்கியமாக விட்டுகொடுப்பதை தோல்வியாக கருதக்கூடாது
3 .முக்கியமான ஒன்று குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுக்கும் முன் நன்கு யோசிக்கவேண்டும் கணவன் மனைவியிடையே கெமிஸ்ட்ரி இத்யாதிகளை அபோழுதே முடிவெடுக்கவேண்டும் பிரிவதென்றால் கணவன் மனைவி பிரியலாம் தாய் தந்தை பிரிய கூடாது.... அதன் பின் இன்னொரு திருமணம் நடந்தாலுமே அக்குழந்தை படும் துன்பம் ஏராளம்.....
4 . குழந்தை வந்த பின் கணவன் மனைவியின் அணியோன்யத்தில் சிறிது நெருடல்கள் ஏற்படும் அதை எதிர்கொள்ள பொறுமையை வளர்த்துகொள்ளவேண்டும்...
5 இப்பொழுதேல்லாம் அனேக வீடுகளில் இந்த தற்கொலை மிரட்டல்கள் அதிகமாக கேள்வி படுகிறேன்.....இந்த ஆயுதத்தை மிரட்ட பயன்படுத்துவது பெரிதும் பெண்களே........ இதை போன்ற வற்றை எப்பேற்பட்டாவது போராடி வெல்ல வேண்டும்..... இதை போன்ற வற்றை சாதாரணமாக வளர விடக்கூடாது.. விளைவுகள் விபரீதமானது இதனால் இருவருடைய வாழ்கையும் பாழாக பெரிய வாய்ப்புள்ளது.....இதற்க்கு கவுன்சிலிங் வழங்கும் நிறுவனங்கள் எவ்ளவோ உள்ளன..... ..
6 நாம் நம் தாய் தந்தை சகோதர சகோதரிகளிடம் சண்டை போடும்பொழுது கோர்ட் படி ஏறுவதில்லை அது போல தான் கணவன் மனைவி உறவும் சின்ன சண்டைகளுக்கு கூட கோர்ட் படி ஏற நினைப்பது அபத்தம்.....

இது என் மனதில் தோன்றிய ஆழ்ந்த கருத்து.... தங்களுடைய கருத்துகளும் இங்கே பகிர்ந்துகொள்ளுங்கள்.... நல்லதொரு சமுதாயம் உருவாக நாம் அனுபவித்த பார்த்த சம்பவங்களை பகிர்ந்துகொள்வது அவசியமே.....