Wednesday, March 31, 2010

காலாவதியான மருந்து.... ஜாக்கிரதை


சென்ற வாரம் மருந்து மருத்துவ வியாபாரம பற்றி எழுதி இருந்தேன்... இந்த வாரம் நான் படித்த பார்த்த செய்திகள் என்னை மிகவும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது இந்த போலி மருந்துகள் விற்பவர்கள் மட்டுமின்றி இப்பொழுது காலாவதியான மருந்துக்களை அதிலுள்ள தேதி போன்ற விவரங்களை ஒரு வித அமிலத்தின் மூலம் அழித்து புதிய அச்சினை இட்டு புதிய மருந்தை போல் விற்றிருக்கின்றனர் மருந்து கடைகளும் இதை தெரியாமல் வாங்கவில்லை அதற்க்கு பெரிய சான்று எல்லா கடைகளிலும் சோதனை நடத்த ஆரம்பித்தவுடன் பல மருந்துகள் தொட்டிகளில் கொட்டபடிருக்கிறது அதுபோக பெட்டி பெட்டியாக மருந்துகள் எரிக்கபடிருக்கின்றது..... ..... இது பல காலமாக நடந்திருக்கிறது பெருவாரியாக சென்னையில்..... இதை போன்ற செயல்களில் ஈடுபட்டவர்களை என்னவென்று சொல்வது.... கொடும்பாவிகள்.... அடுத்தவர் உயிரில் தான் தமது குடும்பத்தின் உல்லாசம் என்று வாழ்பவர்கள் இவர்களை அந்நியன் வழியில் பூச்சிகளை விட்டு அழிக்கவேண்டும் என்றே தோன்றுகிறது.,.... இந்த தவறை மறைத்து மேல்கூறிய வழிகளில் தங்களை பத்திரபடுத்திகொண்டுவிட்டது பல மருந்து கடைகள் நாம் செய்யவேண்டிய அடிப்படை ஒன்றே ஒன்று தான் இதற்க்கு நாம் தான் சற்று விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் ... கண்டிப்பாக மருந்து கடைகளில் பில்களை வாங்கவேண்டும் அது இது போன்ற மோசடி நேரங்களில் மருந்து கட்டுப்பாடு வரியங்களுக்கோ அல்லது கன்சூமர் கோர்ட் களுக்கோ கொண்டு செல்ல வசதியை இருக்கும்,......

Friday, March 26, 2010

மருந்து, மருத்துவம்,வியாபாரம்

சென்னையில் காலாவதியான போலி மருந்துகளை விற்ற ஆசாமியை போலிஸ் அர்ரெஸ்ட் செய்திருக்கிறது இதுதான் லேட்டஸ்ட் நியூஸ்.... ஆனால் இதை போன்ற பல சம்பவங்கள் சமீக காலமாக அல்ல பல காலங்களாக இங்கு நடந்து கொண்டிருகிறது... இது பலருக்கு தெரிய வாய்ப்பில்லை.இந்த மருந்து சம்பந்தப்பட்ட துறைகளில் நடந்து கொண்டிருக்கு நான் அறிந்த பல விஷயங்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்(முக்கிய குறிப்பு: நான் எல்லா மருத்துவர்களையும் குறை கூறவில்லை மருத்துவத்தை உணர்வில்லாமல் வணிகமாக செய்து வரும் மருத்துவர்களை மட்டுமே. இதில் வேதனை படவேண்டிய விஷயம் இந்த சதவிகிதம் சற்று அதிகமே... )இதை வணிக யுத்தி என்று சொல்லுவதா இல்லை அநியாயம் என்று சொல்வதா என்பதை அவரவர் மனதிற்கேற்ப விட்டுவிடுகிறேன் ...........உலகளவில் நிராகரிக்கப்பட்ட பல மருந்துகள் இந்தியாவில் விற்க்கபடுகின்றன, விற்கப்பட்டன! இதற்கு இரண்டு சான்று
1 . PHENYLPROPANOLAMINE (விக்ஸ் ஆக்ஷன் 500 ௦௦) இருமலுக்குஉலக நாடுகள் தடை செய்ய காரணம் : இதயம பாதிக்கபடுவது
2 NIMUSLIDE - வலி நிவாரணிதடை செய்ய காரணம்- நுரையீரல் பாதிப்புக்கள்
மேலே கூறியவை போக இன்னும் பல மருந்துகள் இருக்கின்றன,.....இவை அனைத்தும் உலகளவில் பல அராய்ச்சிகள் செய்து தடை செய்யபட்டிருந்தாலும் நம் நாட்டில் விற்கபட்டிருகின்றன ...
இதை விற்ற கம்பனிகளும் பெரும் லாபம் ஈட்டியிருக்கிறது.
இதற்கெல்லாம் காரணம்
1 . சரியான சட்டங்கள் இல்லாமை
2 . இதனை நன்கு அறிந்த மருத்துவர்கள் அந்த கம்பெனிகள் தரும் ஸ்பான்சர், கிபட்ஸ் , மற்றும் எத்தனையோ சுய லாபங்களுக்காக அவற்றை சிபாரிசு செய்வது,
அவர்களெல்லாம் ஊற்றிய தண்ணீரில் பெரும் மரமாக வளர்ந்து நிற்கிறது பல மருந்து,மருத்துவ மோசடிகள் .....
அந்த மருத்துவர்கள் ஒரு மருந்து கம்பெனிகளின் ரெப்ரசெண்டடிவ் வரும்பொழுது அவர்களிடம் கேட்கும் முதல் கேள்வி
" நான் உங்களுக்கு பிசினெஸ் தந்தால் நீங்க எனக்கு என்ன செய்விங்க என்பதுதான்" அவர்களின் ஸ்பான்சர் அளவை பொறுத்து அவர்களின் மருந்து சிபாரிசு செய்யப்படும் இவை போக பல மருந்து கம்பனிகளிர்க்குள் போட்டா போட்டியே நடப்பதுண்டு யார் நல்ல கிப்ட் அலல்து ஸ்பான்சர் கொடுப்பது கொடுத்ததென்று !
இதுபோக இந்த கம்பனிகள் கடைகளில் மருந்துகளை அடுக்க செய்யும் உத்திகள் இன்னும் அதிகம்
இது இப்படியென்றால் லேப்களின் அட்டுழியம் வேறு வகை இவர்களுடய் வியாபார யுத்தி- தங்கள் லேபுக்கு வரும் ஒவொரு சீட்டுக்கும் அதை தொடர்புடைய டாக்டர்களுக்கு தனி கமிஷன்.....?
இதற்காகவே பல நேரங்களில் தேவை இல்லாமல் நோயாளிகளை லேபுக்கு அனுப்பும் டாக்டர்கள் பல.....
இவை இப்படி என்றால் ஹாஸ்பிடல்களின் வியாபார உத்தி இன்னும் கொடுமை....ஒரு ஹாஸ்பிடலில் அட்மிட் ஆனால் அவர்கள் முதலில் நம்மை பற்றி விசாரிப்பது நாம் எந்த வேலையில் உள்ளோம் என்று.... உதரனத்திற்க்கு IT துறை என்றால்..... அதன் பில் விளைவு தனி....
இப்படி பெருவாரியான மருத்துவம் வியாபார உத்திகள் என்று சமாளித்துக் கொண்டிருக்கும்பொழுது நம்மை காப்பவர்கள் யார் என்றால் கண்டிப்பாக நம்மை போன்ற சாதாரண மக்களை காக்கபோவது சட்டங்கள் அல்ல நாமேதான் அதற்க்கு என்னால் முடிந்த சில டிப்ஸ் களை பகிர்ந்துகொள்கிறேன்.
1 . மருந்துக்களை பற்றி அவசியம் தெரிந்துகொள்ளுங்கள் ... தடை செய்யப்பட்ட மருந்துகளை பற்றி விழிப்புணர்வோடு இருங்கள் உங்கள் மருத்துவர் அதை சிபாரிசு செய்தாலும் நேராக முடியாது என்று சொல்லுங்கள்.
2 . அடிப்படையான ஒன்று எக்ஸ்பயரி டேட் பார்க்காமல் எந்த மருந்தையும் ஏற்றுகொள்ளதீர்கள் . முக்கியமாக பில் வாங்குங்கள் ....
3 . முடிந்தவரை உங்கள் பண வசதி வேலை போன்றவற்றை ஹாஸ்பிடல்களில் பகிர்ந்து கொள்ளாதீர்கள்
4 முடிந்தவரை ஆண்டிபயாடிக்ஸ்களை நிராகரியுங்கள் .... ஆண்டிபயாடிக்ஸ் என்பது தற்காலிக தீர்வுகளை கொடுத்து பல நிரந்தர .... பிரச்சினைகளை கொண்டு வரும் .....அது மட்டுமின்றி நம் உடம்பில் உள்ள நோய் எதிர்ப்பு தன்மையை அடியோடு அழித்து விடக்கூடியது......குறைந்தது தலைவலி ஜலதோஷம் போன்றவற்றிர்காவது அவசியம் ஆண்டிபயாடிக்ஸ் களை தவிருங்கள்.......
5. முடிந்தவரை சிறு சிறு வியாதிகளுக்கு (சான்று தலைவலி,இருமல்) பாட்டி வைத்தியங்களை கையாளுங்கள் .....வீட்டிலிருக்கும் பெரியோர்களிடம் கேட்டு அவசியம் கற்று தெரிந்துக்கொள்ளுங்கள் .... அவற்றின் அருமை அந்த வைத்தியங்கள் அழிந்த பின் தான் நமக்கு தெரியும்.... போக அதே பொருட்களை கொண்டு மருந்து என்று பல மடங்கு பணத்தை பிடுங்கி பெரும் கம்பெனிகள் விற்பனை செய்யும்போது தான் உணருவோம்.

Tuesday, March 23, 2010

பயமே....கல்கி போன்ற கொடூரமானவர்களின் மூலதனம்


இன்று தொலைகாட்சியில் கல்கியின் கொடூரங்களை கண்டு மிகவும் மனம் வேதனை அடைந்தேன்...... நித்தியானந்தாவை விட பல மடங்கு கொடூரமானவன் இவன் .... தான் பணம் சேர்த்து சொகுசாக வாழ எத்தனை ஜீவன்களை போதைக்கு அடிமைகளாக்கி இருக்கிறான் ... இவனுக்கு தூக்கு என்பது கூட மிக குறைவான தண்டனையே
அவன் செய்த கொடூரங்களை கூறி இங்கு நான் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை அது தொலைகட்சில்களில் (சன் நியூஸ் மற்றும் டிவி-9) ஒளிபரப்பாகிகொண்டிருக்கிறது அனைவரும் பார்த்து தெளிவடைய வேண்டிய ஒன்று...
நான் இங்கே அலச நினைப்பது .... இதை போன்றவற்றில் சிக்குபவர்கள் யார்...யார்
கண்டிப்பாக பெரும் பகுதி படித்தவர்களே.... கல்கியின் அட்டுழியம் வெளி நாடுகளிலும் படர்ந்திருப்பதே இதற்க்கு பெரும் சான்று.,. இவர்கள் பெரிதும் நம்புவது வெளி நாட்டிலிருந்து வரும் NRI பண்ட்ஸ்களை தான் ... அப்படி பணத்தை கொட்டும் NRIக்கள் கண்டிப்பாக கல்வி அறிவு கொண்டவர்களாகவே இருக்கமுடியும் அப்படி இருந்தும் ஏன் நம்புகிறார்கள்?
பயம் தான் காரணம்!.... இந்த போலிகள் பணய கைதிகளாக வைத்திருப்பது மக்களின் பயத்தை..........
அதற்க்கு அறியாமை என்று கூறுவது அபத்தம்.... இதை பார்க்கும் பொழுது நாம் கற்கும் கல்விக்கும் , மூட நம்பிக்கைகளுக்கும் துளியும் சம்பந்தம் இல்லை என்றே கூற தோன்றுகிறது. இதை போன்றவற்றிலிருந்து விடுபடவீண்டுமேன்றால் எதையும் ஆராயும் திறன் வேண்டும் .... அது ஒவ்வொரு மனிதனும் வளர்த்துக்கொள்ளவேண்டிய கலை ......
இதற்கு ஒரு பெரும் எடுத்துகாட்டு... நான் கணிப்பொறியில் வேலை செய்பவன்.... என்னுடைய இ-மெயில்இற்கு குறைந்தது வாரம் ஒரு தொகுப்பு வருவதுண்டு அவற்றில் "ஒரு கடவுளின் படத்தை போட்டு வாசகமோ இல்லை சில மந்திரங்களை எழுதி ... அவற்றின் கீழே மிரட்டபடிருக்கும் இந்த கடிதத்தை மேலும் சிலருக்கு அனுப்ப மறுத்தால் பல கெடுதல் ஏன் இறப்பு கூட நேரிடும்" என்று....... இதை எல்லாம் அனுப்புபவர்கள் படித்தவர்களே.....
இதை அவர்கள் அனுப்புவதற்கு என்ன காரணம்,,,,, பயம்.........
இதனால் தான் கல்கி என்பவன் தான் கடவுள் என்று அபத்தமாக அறிவித்தபோதும் பலர் எதிர்க்க மறுத்தனர்,..... மறுக்கின்றனர் ,....இதுதான் போலிகளின் முதலீடு..........
இதற்கு என்ன செய்யலாம்...என்ன தீர்வு என்று சிந்திக்கையில் எனக்கு சில வழிமுறைகள் தோன்றின அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்
1 நமக்குள்ளிருக்கும் தேவையற்ற பயங்களை நீக்க வேண்டும் உதாரணமாக மேலே கூறிய இ- மெயில்களை டெலீட் செய்யும் அளவிற்காவது நம்மிலுள்ள பயத்தை நீக்கவேண்டும்..... இதற்காக நம் தலை நிலைப்படியில் முட்டினால் கூட அதுதான் காரணம் என்று நினைக்கின்ற மனோபவத்தை மாற்றிக்கொள்ளவும் வேண்டும்
2 கடவுளை வணங்க தரகர்கள் தேவை இல்லை என்ற நிலையை உறுதியாக கடைபிடிக்கவேண்டும் .
3 . இதை போன்றவற்றில், பணத்தை விரயம் செய்பவர்கள் சிறிது சிந்திக்கவேண்டும ....ஆராயவேண்டும் உதாரணத்திற்கு எத்தனை எத்தனையோ குழந்தைகள் பட்டினியால் வாடி கொண்டிருக்கும்பொழுது.... கல்கி போன்ற வஞ்சகர்களிடம் நாம் உழைத்த பணத்தை ஏன் கொடுக்கவேண்டும் என்று.... எது உண்மையான கடவுளின் சேவை? அக்குழந்தைகளின் உணவா அல்லது போலிகளுக்கு உல்லாசமா ? என்று ......
4 . சிருவையது முதலே நாம் குழந்தைகளுக்கு " அனலிடிகல் ஸ்கில்" என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள் எதையும் ஆராயும் திறன் என்பதே அதன் பொருள், அதை வளர்த்து விட வேண்டும்......பயத்தையூட்டி கடவுள் நம்பிக்கைகளை வளர்த்துவிடுவதை பெற்றோர்கள் அடியோடு நிறுத்தவேண்டும்
5 இதை போன்ற போலிகள் பிரபலம் அடைவத்ருக்கு பெரும் காரணம் அவர்களை பற்றி செய்தி பரப்புபவர்கள் .... இனி அதை போன்றவர்கள் தாம் நன்மை அடைந்தாலும் நன்கு சிந்தித்து ஆராய்ந்தே; மற்றவர்களிடம் அவற்றை பகிர வேண்டும்....

இவைகளை கடைபிடித்தால் கண்டிப்பாக நாம் மட்டுமின்றி நம்மால் பிறரையும் அபாய வலைகளில் சிக்காதவாறு காத்து புண்ணியம் தேடி கொள்ளமுடியும் .....
தங்களுடைய கருத்துகளை பகிர்ந்துகொள்ளவும்.....

Thursday, March 11, 2010

குற்றம்.....கடமை தவறியவர்கள்

ஒரு அலசல்

ஒரு சமுதாயத்தில் ஒரு குற்றம் ஒருமுறை இருமுறை நடக்குமாயின் குற்றவாளிகளை வசை பாடலாம்
ஆனால் தொடர்ந்து நடக்கும் பட்ச்சத்தில் ......?
போலி சாமியார் குற்றத்தில் நித்தியானந்தா எத்தனையாவது மனிதர்?
சற்று சிந்தித்து பார்க்கும் பொழுது மூன்று கடமை தவறிய பொருப்பாளிகளைப் பற்றி அலச தோன்றியது ...

1 . செய்தி தொடர்பாளர்கள்- நாளிதழ்,தொலைகாட்சி அனைத்தும் இதில் அடக்கம்
2. காவல்துறை
3 காலம் தாழ்த்தி போரட்டங்களை நடத்தும் இயக்கங்கள்....

இவர்கள் கடமை தவறியவர்களே ஏன்?.... அலசுவோமா.....

1 . செய்தி தொடர்பாளர்கள்:-

இதை ஒளிபரப்பிய டிவி இந்த செய்தி கிடைத்தவுடன் என்ன செய்திருக்கவேண்டும்.... வியாபார நோக்கமில்லாமல் காவல்துறையிடம் ஒப்படைத்திருக்கவேண்டும்.... அப்படி செய்திருந்தால்... ஓடி ஒளிந்திருக்கும் குற்றவாளியை பிடிக்க தனி படை என்ற செலவை குறைத்திருக்கலாம், குற்றவாளி மற்ற சாட்சியங்களை முடக்குவதற்கு முன் கைதும் செய்திருக்கலாம் .....
ஒரு நாளிதழ்! இந்த சாமியாரை பிரபல பிரபலபடுத்தியாவர்களே இவர்கள்தான்... இப்பொழுது அந்த குற்றவாளி சம்பந்தபட்ட தொடரை நிருத்தபோவதாக கூறுகிறது .... வேடிக்கை!... ஐயா நீங்கள் தொடர்ந்தாலும் யாரும் அதை வாசிக்கபோவது இல்லை... எனவே வியாபார நஷ்டம் உங்களுக்குதான்.....

இதை போன்று பல போலிகளை பிரபலமாக்குவது மேல் கூறிய தொடர்பினங்கள்தான்.

சரி .... இந்த சம்பவம் நடந்த பிறகு சமூக அக்கறை உள்ளவர்களான பத்திரிக்கை உலகமும் தொலைகாட்சிகளும் என்ன முடிவேடுத்திருக்கவேண்டும் .... இனி எந்த மத போதனை ஆசாமிகளின் உரையையயும் வெளி இடக்கூடாதென்று ....நடந்ததா இன்னும் பல தொலைகாட்சிகளில் சமைய போதனை (எல்லா மதமும் பொருந்தும்) ஆசாமிகள் வந்து கொண்டு தானே இருக்கிறார்கள்
நாளிதழ்களில் . நித்தியானந்தா அல்லாத வேறு ஆனந்தாக்கள் எழுதிக்கொண்டுதானே இருகிறார்கள்....
பிறகு குற்றம் தொடராமல் ? நேற்று பிரேமானந்தா இன்று நித்தியானந்தா நாளை .....? .....

2 . காவல்துறை :-
காவல்துறை என்பது பல பிரிவுகள் உள்ளடங்கியது உளவுத்துறை, அதிரடி படை, சட்டம் ஒழுங்கு......இன்னும் பல ... இதில் informer என்கின்றவர்கள் வேறு......
இத்தனை இருந்தும் இதை விட சிறிய செய்தி சேகரிக்கும் நிலையம் சாட்சிகளை சேகரிக்கிறதேன்றால்?......... மிகவும் வேதனையாக இல்லை?
ஒரு தவறு ஒரு முறை நடக்கின்ற போதே மற்ற ஆசிரமங்களின் மீது இவர்கள் கண் வைத்திருக்க வேண்டும் ....
என்ன சொல்வது.......இந்த துறையின் குறைகள் அனைவரும் அறிந்ததே அதை விளக்கி நான் நேரத்தை வீனாக்க விரும்பவில்லை

3 . போராட்டம் செய்யும் இயக்கங்கள்:-


ஒரு செய்தி ஒளிபரப்பப்பட்டு அதை உலகமே பார்த்து விட்ட நிலையில் பல இயக்கங்கள் போராட்டம் செய்து கொண்டு இருக்கின்றது ....!
போராட்டம் என்பதின் நோக்கமே... மக்களின் எழுச்சி.... எவருமே அறியாத ஒரு ஆசிரமமோ ஒரு செயலகமோ தவறு செய்து கொண்டிருக்கும்பொழுது அதை எதிர்த்து போராடி,... அனைவரின் கவனத்தையும் ஈர்த்து அதை பற்றிய உண்மைகளை வெளி கோனர்வதே இவர்களின் பொறுப்பு
ஆனால் இவர்கள் இன்று செய்து கொண்டிருப்பது செத்த பாம்பை அடித்துக்கொண்டிருப்பது .... நித்தியானந்தாவை கைது செய், கைது செய் என்று.,கூறும் ...... இவர்கள் பார்த்த தொலைகட்சிகலையோ அல்லது செய்தி தாள்களையோ யாரும் பார்த்திருக்கமாடர்களா ? இல்லை இவர்கள் கூறாவிட்டால் நித்யானந்தாவை கைது செய்ய மாட்டார்களா அப்பட்டமான சாட்சிகள் வெளி வந்து கொண்டிருக்கும்பொழுது?... இவர்கள் இப்பொழுது .நடத்தும் போரட்டங்கள் பப்ளிசிட்டிக்காக என்றே சொல்ல தோன்றுகிறது

இவர்கள் என்ன செய்திருக்கவேண்டும்.?... வேறு சமூகம் அறியாத
குற்றங்களை வெளி கொண்டு வந்திருக்கவேண்டும் இல்லை இதே குற்ற தொடர்புடைய ; இன்னும் பல ஆசிரமங்கள் உள்ளன சான்றாக சாமியார் என்ற போர்வையில் காலை தொட இவ்வளவு தொகை நின்று பார்க்க ஒரு தொகை என்று வசூல்ராஜாவாக ஆசிரமங்களை நடத்திகொண்டிருக்கும் கூட்டம் இந்த ஆசிரமங்களை முற்றுகைஇட்டு
விழிப்புணர்ச்சி ஏற்படுத்திஇருக்கவேண்டும் ..... நடக்கவில்லை !

இவர்கள் அனைவரும் பொதுப்படையாக மக்கள், மக்கள் விழிபுணர்வு, மூடநம்பிக்கை........என்று . காரணம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கு ஒரு சிறு விளக்கம் மக்கள் என்பது ஒரு சொல ஆனால் அது பல கோடி மனிதர்களையும் உள்ளடக்கியது அதை கூறினால் யாரும் தனிப்பட்டு கொவித்துகொள்ளமுடியாது ... பழி போட வசதியாய் இருக்கும் ஒரு சொல் அவ்வளவே ...

குற்றங்கள் மேலும் நடைபெறாமல் தடுக்கும் பெரும் பொருப்பிளிருக்கும் இவர்கள் சமுக கடமைகளை ஆற்றுவது எப்போது ?.... ...............

Monday, March 8, 2010

பயங்கரம் காத்திருக்கிறது ....... மகளிர் இடஒதுக்கீடு பின்னனி

அரசு மகளிர் இடஒதுக்கீடு மசோதாவைத் தாக்கல் செய்திருப்பது ஏதோ மகளிர் நலத்தின் மீதுள்ள அக்கறையால் என்று யாராவது நினைத்தால், அது தவறு. பிரச்னையைக் கிளப்பும் இந்த மசோதாவை இப்போது தாக்கல் செய்திருப்பது, ஒவ்வோர் இந்தியக் குடிமகளின் வருங்காலத்தையும் பாதிக்க இருக்கும் சர்ச்சைக்குரிய இன்னொரு மசோதா நாடு தழுவிய விவாதத்துக்கும், எதிர்ப்புக்கும் வழிகோலாமல் இருப்பதற்காக.
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் முயற்சியாகப் பயன்படுத்த முற்பட்டிருக்கிறது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு என்பதுதான் உண்மை.
இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தான பிறகும் அணுமின்சக்தி உற்பத்திக்கான முயற்சிகள் ஏன் தொடங்கவில்லை என்று தெரியுமா? இந்தியாவில் முதலீடு செய்து அணுமின்சக்தியை உற்பத்தி செய்யப் பன்னாட்டு நிறுவனங்கள் தயாராக இல்லை என்று ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு தான் நமது அணுசக்தித் துறைக்குத் தெரிய வந்திருக்கிறது. அதற்கு என்ன காரணமாம்?
அணு உலைகள் வெடித்துச் சிதறி அதனால் ஏற்படும் விபத்துகளுக்கு இழப்புத் தொகை கொடுக்க வேண்டி வருமே என்கிற கவலையால்தான் அன்னிய நிறுவனங்கள் அணுமின்சக்தி நிலையங்களை நிறுவ முன்வரவில்லை என்பதுதான் காரணம். அதாவது, அன்னிய முதலீட்டாளர்கள் அணுமின்சக்தி நிலையங்களை நிறுவி, அதிக லாபத்துக்கு மின்சாரத்தை விற்று லாபம் சம்பாதிக்கத் தயார். ஆனால், விபத்துகள் ஏற்பட்டால் அதற்குப் பொறுப்பேற்கத் தயாராக இல்லை.
உடனே, நமது அரசு என்ன செய்ய முற்பட்டிருக்கிறது, தெரியுமா? இந்தியாவின் கடைசிக் குடிமகன்வரை, ஒவ்வொருவருடைய நன்மையையும், நல்வாழ்வையும் கருத்தில்கொண்டு செயல்படும் ஜனநாயக அரசு, தனது குடிமக்களைப் பற்றிய கவலையை விடுத்து, முதலீட்டாளர்களின் நன்மையைக் கருதி ஒரு சட்டத்தையே இயற்ற முன்வந்திருக்கிறது. அணுசக்தி விபத்துக்கான நஷ்டஈடு சட்டத்தின் முன்வரைவு இப்போது நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படக் காத்திருக்கிறது.
இந்தச் சட்ட முன்வரைவின்படி, அணுஉலைகளில் ஏற்படும் எந்தவித விபத்துக்கும் அணுமின்சக்தி நிலையம் நடத்தும் நிறுவனம்தான் பொறுப்பு. அப்படி விபத்து ஏற்படும்பட்சத்தில், அதிகபட்ச இழப்புத் தொகை ரூ. 2,785 கோடி மட்டுமே. அதுமட்டுமல்ல, அணுமின் நிலையம் நடத்துபவரின் பங்கு இதில் வெறும் ரூ. 500 கோடிதான். அதற்கும் அதிகமான தொகையை, அதாவது துண்டு விழும் ரூ. 1,805 கோடியை அரசு நமது வரிப்பணத்திலிருந்து ஈடுகட்டும். எப்படி இருக்கிறது கதை?
இப்படி ஒரு சட்டம் இயற்றி, அணுமின் நிலைய நிறுவனம் பாதுகாக்கப்பட்டால் மட்டுமே, இந்தியாவுக்கு அணுமின்சக்தி நிலையம் தொடர்பான அணுஉலைகளையும் ஏனைய இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியையும் தங்களது நிறுவனங்கள் வழங்கும் என்று அமெரிக்க அரசு திட்டவட்டமாகக் கூறிவிட்டிருக்கிறது. இந்த நிபந்தனைகள் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்திடுவதற்கு முன்பே விதிக்கப்பட்டதா, அதை இந்திய அரசு ஏற்றுக் கொண்டதா என்பது தெரியவில்லை.
இந்தச் சட்ட முன்வரைவைச் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையும், நிதியமைச்சகமும் கடுமையாக எதிர்த்ததாகத் தெரிகிறது. அணுக் கசிவாலோ, விபத்தாலோ மனித இனத்துக்கும், விலங்குகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் அபாயம் என்பது ஏதோ வாகன விபத்தாலோ, இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் விபத்துகளாலோ ஏற்படுவதுபோல, அப்போது ஏற்பட்டு முடிவடைவதல்ல. இதன் பின்விளைவுகள் தலைமுறைகளைத் தாண்டி பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை.
சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு ஹிரோஷிமா-நாகசாகியில் வீசப்பட்ட அணுகுண்டுகளின் பாதிப்பு தலைமுறைகளைக் கடந்து இப்போதும் அந்தப் பகுதியில் பிறக்கும் குழந்தைகளைப் பாதித்துக் கொண்டிருப்பது நிரூபிக்கப்பட்டிருக்கும் உண்மை. போபால் விஷவாயுக் கசிவால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகள் இப்போதும் பின்விளைவுகளைச் சந்திக்கும் அவலம் தொடர்கிறது. செர்னோபில் அணுஉலை விபத்தின் கோரம் இப்போதும் தொடர்கிறது.
இந்தச் சட்ட முன்வரைவு பொத்தம் பொதுவாக இழப்புத் தொகை இவ்வளவு என்று வரையறுக்கிறதே தவிர, அணுஉலை நிறுவுபவரின் நலனைப் பாதுகாக்கிறதே தவிர, இதனால் பாதிக்கப்படும் தனி நபருக்கும், அவரது வாரிசுகளுக்கும், இயற்கைக்கும் சுற்றுச்சூழலுக்கும் என்ன இழப்புத் தொகை என்பதைச் சொல்ல மறுக்கிறதே, ஏன்?
நிதியமைச்சகம் முன்வைத்த நியாயமான எதிர்ப்பு என்ன தெரியுமா? அரசு நிறுவனமோ, தனியார் நிறுவனமோ, எதுவாக இருந்தாலும் அந்த நிறுவனத்தின் கவனக் குறைவாலோ, தொழில்நுட்பத் தவறாலோ ஏற்படும் விபத்துக்கு சராசரி இந்தியக் குடிமகனின் வரிப்பணத்திலிருந்து இழப்புத்தொகை தரப்பட வேண்டிய அவசியம் என்ன என்பதுதான். அணு வியாபாரத்தில் ஈடுபட்டு லாபமடையத் துடிப்பவர்கள், அதனால் ஏற்படும் விபத்துக்கு முழுப் பொறுப்பேற்க மாட்டேன் என்று சொன்னால் எப்படி?
சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையும், நிதியமைச்சகமும் முன்வைத்த எதிர்ப்புகளைப் புறம்தள்ளி பிரதமரின் நேரடித் தலையீடு இந்தச் சட்ட முன்வரைவை அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்ற வைத்துவிட்டது. இப்போது, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவின் மீதான அமளி என்கிற சந்தடி சாக்கில் விவாதத்துக்கு உள்படுத்தப்படாமலே நாடாளுமன்றத்திலும் நிறைவேற்றப்படும் அபாயம் காத்திருக்கிறது.
இந்தியக் குடிமகனின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பைத் தர வேண்டிய அரசு, அணுமின்சக்தி நிலையங்களின் நன்மைக்காகத் தனது கடமையைக் கைகழுவுகிறது. நமது மக்கள் பிரதிநிதிகளும், சமூக ஆர்வலர்களும், படித்த விவரம் அறிந்த பொறுப்புள்ள இந்தியக் குடிமக்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம்..
soruce: http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial&artid=208545&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=

குழந்தையின் உயிரை குடித்த -ஆன்லைன் கேம் மோகம்

குழந்தையின் உயிரை குடித்த -ஆன்லைன் கேம் மோகம்
2010-03-06
இந்த செய்தி s . கொரியாவில் நடந்தாலும் இச்செய்தி என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது இது செய்தி என்பதைவிட எச்சரிக்கை மணி பெற்றோர்களுக்கு என்றே சொல்லவேண்டும்.
அதிர்ச்சியூட்டும் இந்த செய்தியை சற்று விரிவாக பார்ப்போம் .....
ஒரு 3 மாத குழந்தையின் தாய்,தந்தை குழந்தையை வீட்டில் தூங்க வைத்து விட்டு இன்டர்நெட் கபே சென்றுள்ளனர் ....ஆன்லைன் கேம் விளையாடுவதற்காக....
விளையாட்டின் சுவாரஸ்யத்தில் சுமார் 6 மணி நேரம் விளையாடி இருக்கின்றனர் ...பிறகு அவர்கள் மண்டையில் உதித்திருக்கிறது வீட்டில் ஒரு குழந்தை இருக்கிறதேன்று வீட்டை நோக்கி ஓடி இருக்கின்றனர் ....
வீட்டை திறந்து பார்த்தபொழுது அவர்கள் கண்டது ஒன்றே ஒன்று தான்
பட்டினியில் இறந்து கிடந்த குழந்தை ..... என்ன கொடுமை இது

இது செய்தி என்பதை விட அபாய மணி என்று நான் விவரிக்க காரணம் உண்டு
...அங்கு ஆன்லைன் கேம் என்றால் நம்மூரில் மெகா சீரியல் எத்தனையோ விடுகளில் நாம் டிவி இல் முழ்கும் பெற்றோரை பார்த்திருக்கிறோம் ... அவர்களுக்கெல்லாம் இது ஒரு எச்சரிக்கை செய்தி ,.....அவ்வளவே ....

SOURCE :http://www.etaiwannews.com/etn/news_content.php?id=1196972&lang=eng_news&cate_img=1037.jpg&cate_rss=General