Sunday, May 15, 2011

அமைதி புரட்சி

எனது பதிவெட்டில் 9 மார்ச் அன்றே எழுதி இருந்தேன் அமைதி புரட்சியை பற்றி அது தமிழ் நாட்டில் நடந்தே விட்டது
நம் மொழி மொழி என்று கூறி நம் இனத்தவர்கள் மலை மலையக மடிந்தபோது தன 10 தலைமுறைக்கும் சொத்து சேர்ப்பதில் மட்டுமே கவனமாய் இருந்தவர்களுக்கு?..............


ஆத்திகவாதியின் பார்வையில்- தெய்வம் நின்று கொன்றுவிட்டது

நாத்திகவாதியின் பார்வையில்- அநீதிக்கு தண்டனை
கிடைத்துவிட்டது


தண்டனை என்ற வார்த்தை ஏன் ஏன்?
ஒரு கட்சி தேர்தலில் தோற்பது சாதாரணம் தான் தோல்வியும் வெற்றியும் மாறி மாறி வருபவை அனால் இந்த முறை தோல்வி? இது கலைஞரின் கடைசி தேர்தலாக இருக்க நிறைய வாய்ப்புகள் இருக்கிறது? அந்த தருணத்தில் தான் மிகவும் விரும்பி எங்கும் பதவி தான் கையில் இல்லாமல் இருப்பது கண்டிப்பாக தண்டனையே வேதனையின் உச்சமே
இனி தன்னை ராஜா போல நினைத்துகொண்டு வாரம் ஒரு பிரிவினரை முக்கியமாக சினிமா துறையினரை அழைத்து  இவர் புகழ்  பாட வைத்து இன்புரமுடியாது இதுவே பெரும் சோதனை தான் அவருக்கு :-D


ஒரு செம்மொழி மாநாடு என்று தமிழை வளர்க்க முற்பட்டதன் பதில் ஓராயிரம் தமிழ் மைந்தர்களை காப்பற்றி தமிழை வளர்த்திஇருக்கலாம் ?
நான் கூறுவதில் என்ன தவறு?
அரசியல் சாணக்கியர் என்று வருநிக்கபடவர் கடைசியில் நம்பியது வடிவேலுவை? இதுதான் காமெடியின் உச்சமே
இதற்க்கு மேல் பெரிய தந்திரம் எதுவாக இருக்கமுடியும்


இந்த முறை திமுக வேல்வதிர்கான காரணத்தை கூறுவதை விட தொற்பதிர்கான காரணம் அதிகம்
1 . நகரங்களில் 2 g
2 . கிராமபுரங்களில் மின் தடை
3 . தொழில் செய்பவர்கள்- சினிமா துறை, நில ஆக்கிரமிப்புகள், மணல் கொள்ளை,
இவை
எல்லாவற்றிலும்   ஒன்று விடாமல் இருக்கும் இவர்கள் குடும்ப ஆதிக்கம்


இவை எல்லாவற்றையும் உள்ளுக்குள் வைத்து வோட்டளித்து அவர்கள் வரும்பொழுது எல்லாம் கூட்டம்  கூடி உங்களுக்கு தான் வோட்டை போட்டோம் என்று கூறி  எப்படி எல்லாம் நேக்காக காயை  நகர்தியிருகிரார்கள் தமிழக மக்கள்  இது வல்லவோ ஜனநாயக புரட்சி..... இது இந்த கட்சிக்கு மட்டுமில்லை இனி வருபவர் எவராக இருந்தாலும் இனி மக்களை ஏமாற்ற முடியாது..... பெரிய எச்சரிக்கை
அழகாக

Saturday, March 12, 2011

கேள்வி- II



பால் அபிஷேகம் புண்ணியம் என்றால்?
அது தன ரத்தத்தை  பாலாக கொடுத்த  பசுவிற்கா ? அல்லது 
பணம்  கொடுத்து அவற்றை வீணாக்கும்  இந்த மனிதர்களுக்கா?






இந்தியாவின் உணவு பற்றாக்குறை 10 .33% ஆக  உயர்வு?
இந்தியாவின் ரூபாய் நோட்டை கிழித்து வீணாக்குவது  குற்றம்  என்றால்?
பசியால் வாடுவோர் கோடி இருக்க  இப்படி உணவு  பண்டங்களை
வீனாக்குவோரும்  குற்றவாளிகள் தானே? 

Thursday, March 10, 2011

நல்ல கேள்வி?

Wednesday, March 9, 2011

மர்மம் என்ன? கூட்டணி நாடகங்கள்


இந்த முறை காங்கிரஸ் திமுகவுடனுடைய மர்ம பேரங்கள் கூட்டணி பணியல்கள் பல சந்தேகங்களை ஏற்படுத்துகிறது


1 . இவர் 60 ௦ சீட்டுகள் மட்டுமே தருவன் என்பதும் இல்லை 63 சீட்டுகள் வேண்டும் என்று அவர்கள் கேட்பதும் ....வெறும் 3 சீட்டுகளுக்க இவர்கள் அடித்துகொள்கிறார்கள்?


2 . திடுமென்று சோனியா காங்கிரசின் தன்மானத்தை பற்றி பேசுகிறார்.... நல்ல நகைச்சுவை இதே கலைஞர் தான் அன்று இந்திரா காந்தியை ரத்த காட்டேரி என்றும் , ....இன்னும் எத்தனை எத்தனையோ கூறி இருக்கிறார்.... இதை எல்லாம் மீறி அமைந்த கூட்டணிக்கு திடுமென்று எங்கே இருந்து தன்மானம் வந்தது ?


3 . 2g ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சில முக்கிய புள்ளிகள் விசாரிக்கபடலாம் என்று அஞ்சப்படும்போது திடுமென்று பேசப்படும் பேரங்கள் , அடங்காதவர்கள் அடங்கி பொய் பணிவது இவை எல்லாம் அந்த விவகாரத்தில் வரும் உண்மையை எவ்வளவு தூரம் தடுக்கும் என்பது கவலை மிகுந்த விஷயம்?


4 .நம் தமிழ் சகோதரர்கள் கூட்டம் கூட்டமாக மடிந்தபோது எதனை முறை டெல்லி விரைந்தார்கள் இல்லை தலைவர்களை சந்தித்தார்கள் என்பது மனதை உருக்கும் கேள்வி? இபோழுது இத்தனை முறை அதுவும் தல்லாமல் இருந்தாலும் விடாமல் செல்கிறார்கள்! கண்கூடாக நடக்கும் வேதனை .......நம் மக்களை அழிக்க உதவியர்களின் ஆதரவை பெற இத்தனை பணிவு இத்தனை கெஞ்சல்கள்.... இதெல்லாம் மீறி ...... தங்களை பறை சாற்றி கொள்வது என்னவென்றால்?


தமிழ் மக்கள் நலனுக்காக தமிழ் மண்ணுக்காக உயிர் என்று ............... வடிவேலுவின் டோனில் சொலவேண்டுமேன்றால் இன்னுமா இந்த ஊரு நம்மள நம்புது? என்று கேட்பது போல் இருக்கிறது

5 . இதெல்லாம் விடுங்க தேர்தல் ஏப்ரல் 13 இருக்க வோட்டு எண்ணிக்கை ஏன் ஒரு மாதம் கழித்து நடத்தப்படவேண்டும்?


இதன் முடிவு:
சரி ஒவ்வொரு  முறையும் யார் வந்தாலும் மக்களுக்கு ஒன்றும் சிய போவதில்லை ஒன்று அவர்கள் குடும்பத்திற்கு அல்லது சினிமா துறை சேர்ந்தவர்களுக்கும் மட்டுமே உபயோகம் என்று ஓரிரூ முறை ஓட்டை செலுத்தாமளிருந்ததுண்டு
ஆனால் இம்முறை நம் இனத்தவர்கள் மடிந்ததற்கு அஞ்சலி செய்ய வேண்டும்
அவர்களுக்கு உதவ வழி இருந்தும் அவர்கள் அழிவதற்கு உதவியர்களுக்கு
எனது வோட்டு கள்ள வோட்டின் மூலம் போய்விடக்கூடாது என்பதற்காகவே
இம்முறை கண்டிப்பாக வோட்டை போடவேண்டும் என்று முடிவேடுத்திருகிரேன்