Friday, April 16, 2010

தன்னம்பிக்கையற்றவர்கள்

இந்த தலைப்பை யோசித்தவுடன் என் மனதில் பட்டென நினைவிற்கு வந்த பிரபலம் நடிகர் விஜய்தான்
ஏன்.....;?எத்தனையோ பேர் இருக்கும்பொழுது இவர் ஏன்....?
நான் இவரது ரசிகனா இல்லை இவரை வெறுப்பவனா என்பதல்ல விஷயம்
இளைய நடிகர்களில் அரசியலில் நுழைய பெரும் ஆசை ஆர்வமுள்ளவர் இவர்? அதுதான் பெரிய காரணம்
ஆனால் அரசியலில் நுழைய குறைந்தது தன்னபிக்கையாவது வேண்டும்....!

இத்தனை வருடம் ஆகிவிட்டது.....எத்தனை படங்கள் இறக்கம் ஏற்பட்டாலும் தந்தையின் உதவிகள் பெற்றாகிவிட்டது
இப்பொழுது ஐம்பதாவது படத்தை நோக்கி இன்னுமா தனம்பிக்கை வளரவில்லை?

உங்களுடைய வேட்டைக்காரன் எடுத்துகொள்ளுங்கள் ... ஏவிஎம் எனும் பெரும் பேனர் தயாரித்தும் சன் டிவியிடம் விற்றீர்கள் காரணம் ? இவர்கள் அனைவரும் ஏன் தாங்கள் கூட கொடுக்கமுடியாத வெற்றியை சன் டிவி கொடுக்க முடியும் என்று நம்பி?
ஒரு பெரும் நிறுவனம் தயாரித்தும் அதில் பெரும் புலி சிறுத்தை என்று பறை சாற்றிகொள்ளும் தாங்கள் நடித்தும் சன் டிவியை நம்பி விற்கிறீர்கள் என்றால்....;;.
இதுவாவது போகட்டும் உங்களது ஐம்பதாவது படத்திற்கும் அதே நிறுவனத்தை தொங்கி கொண்டிருகிறீர்கள் உங்களை பற்றி என்ன சொல்வது?
சுருக்கமாய் சொன்னால் தங்களுக்கு பண ஆதாயம் எங்கோ அதை சார்ந்தே வாழ விரும்புபவர் நீங்கள் !
உங்களுக்கு உங்களால் வெற்றி கொடுக்க முடியாது என்ற பெரும் நம்பிக்கை ........அதற்க்கு தேவை படுபவர்கள் சன் டிவி.... கடைசியில் என் படம் ஓடியது நான் அடுத்த அகில உலக சூப்பர் ஸ்டார் என்று பெருமை பீற்றிகொல்வது
ஒரு இருபது கோடி படத்தையே உங்களை நம்பி எடுக்காதவர் நீங்கள் உங்களை நம்பி எப்படி ஐயா தமிழ் நாட்டை கொடுக்க சொல்லுகிறீர்கள்?
சுறாவிற்கு பிறகு தங்களை பற்றிய அபிப்பிராயம் ..............
1. ஒன்று உங்களால் தனிச்சையாக எதையும் கொண்டு செல்ல இயலாது!.
2. இன்னொன்று உங்கள் மீதே இப்பொழுது உங்களுக்கு நம்பிக்கை கிடையாது !

இந்த நாட்டில் பிறந்த எவரும் நாட்டை ஆள ஆசைப்படுவது தவறில்லை ஆனால் அதற்குரிய தகுதிகளை வளர்த்துகொள்ளவேண்டும் என்று ஒரு ஓட்டளிக்கும் உரிமை உள்ள நான் நினைப்பதில் என்ன தவறு ?