Thursday, October 7, 2010

எந்திரன் - தமிழ் சினிமாவின் அடுத்த கட்டம்

சரி படம் வந்து ஒரு வாரம் ஆகிவிட்டது பார்க்கலாம் கூட்டம் கம்மி ஆகி இருக்ககூடும் என்று பெங்களூரில் தியேட்டருக்கு சென்றேன்..... ஏமாற்றம் ....கூட்டம் அலைமோதியது....சரி ஹிந்தியிலாவது பார்க்கலாம் என்றால் அங்கும் கூட்டம் ..... எனக்கு மனதில் தோன்றிய ஒன்று




ரஜினியின் " இது நானா சேர்த்த கூட்டம் இல்லை அன்பால சேர்ந்த கூட்டம் " என்ற வசனம்  தான்  கண்டிப்பாக இன்னும் ரஜினி நூறு படங்கள் நடித்தாலும் இந்த கூட்டம் இருக்கும் ..... ரஜினிக்கு ஒரு வேண்டுகோள்- சிரஞ்சீவியை போல் அரசியலில் குதித்து பாழாகாமல் சினிமாவில் இந்த சிம்மாசனத்திளியே இருங்கள்.... இந்த இடம் யாருக்கு கிடைகாத ஒரு தனி இடம்......இனி யாரும் அடைவது மிக மிக கடினம் ...


சரி ஒருவழியாக 200 டிக்கெட் எடுத்து உட்கார்ந்தேன் முதலில் கொஞ்சம் நெருடல் இருந்தது இருநூறு ருபாய் என்று


படம் பார்த்த பிறகு மனதில் -: அந்த இருநூறு ருபாய் மறந்தே போனது " movie is worth "


விமர்சனம்:


இரு விமர்சனம் ரஜினி ரசிகராக, நல்ல படங்களை விரும்பும் ரசிகனாக


1 . நல்ல படங்களை விரும்பும் ரசிகராக--
அணையப்போகும் விளக்கு பிரகாசமாக எறியும் என்பார்கள் அவ்வகையில் இப்படம் கதை எழுதிய சுஜாதாவிருக்கு சமர்ப்பணம் அருமையான கற்பனை......


கதை-
வசீகரன்   தனது 10 வருட உழைப்பில் ஒரு ரோபோவை உருவாக்குகிறான்.... அதை இந்திய ராணுவத்தில் சேர்த்து பயன் கொள்ள செய்வதே லட்சியமாக...... அதை உணர்ச்சி இல்லாத இயந்திரம் என்று அவரது மூத்த அதிகாரிகள் தள்ளுபடி செய்கின்றனர்.... அதற்காக உணர்சிகளை தரும் செயற்கை புத்தியை(Artifical intelligence ) செலுத்துகிறார். ரோபோ உணர்வை பெற்று வசீகரனின் காதலியை விரும்புகிறது ராணுவ டெஸ்டில் கோட்டை விடுகிறது ....


அட நாம காலேஜ் பசங்க மார்க்கில் கொட்டோ விடுகிறது போல .....

 
சரி கதைக்கு வருவோம் இலட்சியத்தை பாழடித்ததற்காக வசீகரன்  ரோபோவை வெட்டி குப்பையில் போடுகிறான்..... அந்த ரோபோவை , வில்லன் சரி செய்து அழிவை ஏற்படுத்தும் சிப் பை அதனுள் செலுத்துகிறான்....அது வில்லனை கொன்று விஸ்வருபம் எடுக்கிறது


வில்லன் ரோபோ வசீகரனின் காதலியை கடத்தி வசீகரனிர்க்கு  எதிராக போர் தொடுக்கிறது பல ரோபோக்களை உருவாக்குகிறது ........கடைசியில் வரும் கிராபிக்ஸ் பைட் தமிழ் சினிமாவை தலைதூக்கும் ஒரு புதுமை ஆகும் ....சபாஷ் சங்கர் அண்ட் குரூப்


கடைசியில் ரோபோவின் ராஜ்யத்தை அழித்து அதன் அழிக்கும் கமான்ட்களை சரி செய்கிறான் வசீகரன்..... பல சேதங்களை ஏற்படுத்திய இந்த ரோபோவை நீக்க சொல்கிறது கோர்ட் .... தனது பார்ட் ஒவ்வோன்றையும்  தானாகவே கழட்டி வைகிறது ரோபோ ....இப்படி முடிகிறது படம்




படத்தில் பிடித்தது----
1 . பாதிவரை வரும் சுஜாதாவின் வசனங்கள் ...முக்கியமாக அந்த .ட்ராபிக் கான்ஸ்டபிளிடம் உரையாடும் வாசனைகள், காலேஜில் பிட் அடிக்கும்பொழுது பேசும் வசனங்கள்,
2 கிராபிக்ஸ்- தலையை திருப்புவது, காரிலிருந்து முன்னிற்கு இழுத்து சண்டை போடுவது...... கடைசி கிளைமாக்ஸ்
3 கிளைமாக்ஸ் வசனம்- உண்மையில் ரோபோ ரஜினி தனது பாகத்தை கழட்டி வைக்கும்பொழுது நெருடத்தான் செய்கிறது அதுவும் அவர் பேசும் வசனங்கள் மிக உண்மை
" டேய் நீங்க ரெண்டு பெரும் உங்ககிட்ட இருக்கற ஒன்னு என்கிட்ட இல்லன்னு சொன்னீங்களே   அதனால எத்தன சிக்கல் பார்த்தீங்களா  ,,, நான் FEELINGSA  சொன்னேன் " என்று பேசும் வசங்கள் பலவற்றை குறிக்கும் நிதர்சன உண்மை
4 . பாடல்கள்-, எ.ர ரஹ்மான் இசை, ரீ ரெகார்டிங்
5 . குழந்தைகளை கவரும் கொசுவுடன் பேசும் வசனங்கள்


படத்தில் தோய்வு
1 ரோபோ பீலிங்க்ஸ் இல்லாதது என்று நிருபிக்க ஒரு தீவிபத்திலிருந்து ஒரு பெண்ணை உடை இல்லாமல் காப்பாற்றும் சீன்.... அதை பத்திரிகை காரர்கள் போடோ பிடிக்க அப்பெண் தற்கொலை செய்து கொள்வது
மொக்கை ஐடியா.... இது..... மொக்கை காரணம் வேறு ....
.விஞ்ஞான கூடத்தில் வசீகரனை கத்தியால் குத்த வரும் அந்த சீனுடன் விட்டிருக்கலாம் .....
2  கிராபிக்ஸ் அப்பட்டம தெரிகிறது பல இடங்களில் உதாரணம் அந்த தீ விபத்திலிருந்து காப்பாற்றும் சீன்.
ஆஸ்கார் பூக்குட்டி ஸ்பெஷல் எபக்ட்ஸ் இன்னும் கொஞ்சம் மேனகெட்டிருக்கலாம்
3 . வில்லன் ரஜினி என்பது பெரிய ஹைலைட்அதற்கு இன்னும் சிறப்பான வசனங்களை கொடுத்திருக்கலாம்.....நாம் எதிர்பார்த்தது "இது எப்படி இருக்கு" பரட்டை ரஜினி போன்ற ஒன்றை ................ சான்ஸ் மிஸ்


ரஜினி ரசிகனின் பார்வையில்:-
படம் ரொம்ப நல்லா இருக்கு ஆனா
எப்பொழுதும் ரஜினி படத்த பார்த்துட்டு ஏதாவது ஒரு பஞ்ச் வசனம் மனசுல நிக்கும்
அதிருது இல்ல, லக லக லக போன்ற வசனங்கள்.... அப்படி எல்லாம் இதுல எதுவும் இல்ல


தலைவர் நடக்குறத தவிர வேற எந்த ஸ்டைலும் பெரிசா காமிக்கல


பிடித்தது:-


1 அட இந்த காரெக்டருக்கு குறிப்பா வில்லன் கரெக்க்டருக்கு வேறு யாரும் பொருந்தி இருக்க முடியாது .........
2 எப்ப பாரு தலைவர் பட கதை ஒரு பணக்காரநிலிருந்து ஏழை ஏழையிளிருந்து பணக்காரன் இந்த ட்ரெண்டை உடைத்த விதம்
மூன்று  பரிமாணங்களிலும்  விளாசும் விதம் .. ..... அட எத்தன வயசானாலும் நீங்க சூப்பர் ஹீரோ தானுங்க....
4 கடைசியில் பேசும் கிளைமாக்ஸ் வசனங்கள் ரஜினி தவிர வேற யார் பேசி இருந்தாலும் உணர்வு இருந்திருக்க வாய்ப்பில்லை......
5 . அட தலைவரோட பழைய சிரிப்பு


சூப்பர் ஸ்டாரின் மைல் ஸ்டோன் படங்களில் இதுவும் ஒன்று கண்டிப்பாக

பைனல் கமெண்ட்-

1. தமிழ் சினிமாவின் புதிய பரிமாற்றம் .
கண்டிப்பாக குடுமபத்துடன் கண்டு ரசிக்கலாம்...

.
எந்திரன்  கூறும் உண்மை - லவ்வுன்னு வந்துட்டா  மனுஷன் என்ன ரோபோ என்ன எல்லாம் பாழாக  வேண்டியது தான் :-D.