Tuesday, March 23, 2010

பயமே....கல்கி போன்ற கொடூரமானவர்களின் மூலதனம்


இன்று தொலைகாட்சியில் கல்கியின் கொடூரங்களை கண்டு மிகவும் மனம் வேதனை அடைந்தேன்...... நித்தியானந்தாவை விட பல மடங்கு கொடூரமானவன் இவன் .... தான் பணம் சேர்த்து சொகுசாக வாழ எத்தனை ஜீவன்களை போதைக்கு அடிமைகளாக்கி இருக்கிறான் ... இவனுக்கு தூக்கு என்பது கூட மிக குறைவான தண்டனையே
அவன் செய்த கொடூரங்களை கூறி இங்கு நான் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை அது தொலைகட்சில்களில் (சன் நியூஸ் மற்றும் டிவி-9) ஒளிபரப்பாகிகொண்டிருக்கிறது அனைவரும் பார்த்து தெளிவடைய வேண்டிய ஒன்று...
நான் இங்கே அலச நினைப்பது .... இதை போன்றவற்றில் சிக்குபவர்கள் யார்...யார்
கண்டிப்பாக பெரும் பகுதி படித்தவர்களே.... கல்கியின் அட்டுழியம் வெளி நாடுகளிலும் படர்ந்திருப்பதே இதற்க்கு பெரும் சான்று.,. இவர்கள் பெரிதும் நம்புவது வெளி நாட்டிலிருந்து வரும் NRI பண்ட்ஸ்களை தான் ... அப்படி பணத்தை கொட்டும் NRIக்கள் கண்டிப்பாக கல்வி அறிவு கொண்டவர்களாகவே இருக்கமுடியும் அப்படி இருந்தும் ஏன் நம்புகிறார்கள்?
பயம் தான் காரணம்!.... இந்த போலிகள் பணய கைதிகளாக வைத்திருப்பது மக்களின் பயத்தை..........
அதற்க்கு அறியாமை என்று கூறுவது அபத்தம்.... இதை பார்க்கும் பொழுது நாம் கற்கும் கல்விக்கும் , மூட நம்பிக்கைகளுக்கும் துளியும் சம்பந்தம் இல்லை என்றே கூற தோன்றுகிறது. இதை போன்றவற்றிலிருந்து விடுபடவீண்டுமேன்றால் எதையும் ஆராயும் திறன் வேண்டும் .... அது ஒவ்வொரு மனிதனும் வளர்த்துக்கொள்ளவேண்டிய கலை ......
இதற்கு ஒரு பெரும் எடுத்துகாட்டு... நான் கணிப்பொறியில் வேலை செய்பவன்.... என்னுடைய இ-மெயில்இற்கு குறைந்தது வாரம் ஒரு தொகுப்பு வருவதுண்டு அவற்றில் "ஒரு கடவுளின் படத்தை போட்டு வாசகமோ இல்லை சில மந்திரங்களை எழுதி ... அவற்றின் கீழே மிரட்டபடிருக்கும் இந்த கடிதத்தை மேலும் சிலருக்கு அனுப்ப மறுத்தால் பல கெடுதல் ஏன் இறப்பு கூட நேரிடும்" என்று....... இதை எல்லாம் அனுப்புபவர்கள் படித்தவர்களே.....
இதை அவர்கள் அனுப்புவதற்கு என்ன காரணம்,,,,, பயம்.........
இதனால் தான் கல்கி என்பவன் தான் கடவுள் என்று அபத்தமாக அறிவித்தபோதும் பலர் எதிர்க்க மறுத்தனர்,..... மறுக்கின்றனர் ,....இதுதான் போலிகளின் முதலீடு..........
இதற்கு என்ன செய்யலாம்...என்ன தீர்வு என்று சிந்திக்கையில் எனக்கு சில வழிமுறைகள் தோன்றின அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்
1 நமக்குள்ளிருக்கும் தேவையற்ற பயங்களை நீக்க வேண்டும் உதாரணமாக மேலே கூறிய இ- மெயில்களை டெலீட் செய்யும் அளவிற்காவது நம்மிலுள்ள பயத்தை நீக்கவேண்டும்..... இதற்காக நம் தலை நிலைப்படியில் முட்டினால் கூட அதுதான் காரணம் என்று நினைக்கின்ற மனோபவத்தை மாற்றிக்கொள்ளவும் வேண்டும்
2 கடவுளை வணங்க தரகர்கள் தேவை இல்லை என்ற நிலையை உறுதியாக கடைபிடிக்கவேண்டும் .
3 . இதை போன்றவற்றில், பணத்தை விரயம் செய்பவர்கள் சிறிது சிந்திக்கவேண்டும ....ஆராயவேண்டும் உதாரணத்திற்கு எத்தனை எத்தனையோ குழந்தைகள் பட்டினியால் வாடி கொண்டிருக்கும்பொழுது.... கல்கி போன்ற வஞ்சகர்களிடம் நாம் உழைத்த பணத்தை ஏன் கொடுக்கவேண்டும் என்று.... எது உண்மையான கடவுளின் சேவை? அக்குழந்தைகளின் உணவா அல்லது போலிகளுக்கு உல்லாசமா ? என்று ......
4 . சிருவையது முதலே நாம் குழந்தைகளுக்கு " அனலிடிகல் ஸ்கில்" என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள் எதையும் ஆராயும் திறன் என்பதே அதன் பொருள், அதை வளர்த்து விட வேண்டும்......பயத்தையூட்டி கடவுள் நம்பிக்கைகளை வளர்த்துவிடுவதை பெற்றோர்கள் அடியோடு நிறுத்தவேண்டும்
5 இதை போன்ற போலிகள் பிரபலம் அடைவத்ருக்கு பெரும் காரணம் அவர்களை பற்றி செய்தி பரப்புபவர்கள் .... இனி அதை போன்றவர்கள் தாம் நன்மை அடைந்தாலும் நன்கு சிந்தித்து ஆராய்ந்தே; மற்றவர்களிடம் அவற்றை பகிர வேண்டும்....

இவைகளை கடைபிடித்தால் கண்டிப்பாக நாம் மட்டுமின்றி நம்மால் பிறரையும் அபாய வலைகளில் சிக்காதவாறு காத்து புண்ணியம் தேடி கொள்ளமுடியும் .....
தங்களுடைய கருத்துகளை பகிர்ந்துகொள்ளவும்.....

3 comments:

வே.நடனசபாபதி said...

நீங்கள் கூறுவது முற்றிலும் சரி. அதனால்தான் பட்டுக்கோட்டையார் அப்போதே சொன்னார் 'வேப்பமர உச்சியில் நிண்ணு பேயொண்ணு ஆடுதுண்ணு, விளையாடப் போகும்போது சொல்லி வைப்பாங்க, உன் வீரத்தையும் முளையிலேயே கிள்ளி வைப்பாங்க' என்று. எதிர்கால சந்ததியரை பயத்தைப்போக்கி ஆராயும் திறன் உடையவராக வளர்க்கவேண்டும் என்ற உங்களது கருத்துக்கு வாழ்த்துக்கள்!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ஐயா!
படித்த ; நல்ல பதவிகளிலும்; புகழின் உச்சியிலும்; சகல வசதியுடனும் இருக்கும் பன்னாடைகளும் இதில் போய் விழுவதாலன்றோ? அரைகுறைகள் எல்லாம் ஏமாறுகிறார்கள்.
அந்தக் காணொளியைப் பார்த்தேன்.எனக்கு மனநோய் வைத்தியசாலையோ எனும் ஐயம் ஏற்பட்டது.
இக் கயவன் போதைக்கு அடிமையாக்கிவிட்டான். இன்னுமா? சட்டம் இவனைப் பார்த்துக்கொண்டிருக்கிறது.
உடனடியாக இவனுக்கு வரும் வெளிநாட்டுப் பணத்தை அந்த அரசுடன் சேர்ந்து தடை செய்ய அரசு ஆவன செய்ய வேண்டும்.
இவன் கிளை போர் முடிந்த யாழ்ப்பாணமும் சென்றுள்ளதாம்.
இங்கு பிரான்சிலும் கொஞ்சப் பைத்தியங்கள் பூசை புனஸ்காரம் எனத் திரியுதுகள்.

sasikumar said...

நம் மக்கள் சொந்த புத்தியும் உபயோகிக்க மாட்டாங்க சொன்னாலும் கேட்க மாட்டாங்க. இலவசமா கிடைச்சா போவாங்க..
இவனை சொல்லி குற்றம் இல்லை .. இவன் மாதிரி ஆளுங்களை வளர்த்தது மக்கள் தான்...

யாரு போனாலும் கூடவே போவாங்க.. கேள்வி கேட்கமா ... அங்க தான் பிரச்சனையே
முதலையே அவனை கில்லி எறுஞ்சு இருந்த ... இவன் மாதிரி இன்னும் பல பேர் வருவனுன்களா ...

Post a Comment